வழிகாட்டு நெறிமுறை | Guidelines

உயர்கல்வித் துறையின் கீழுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் தங்களது ஆய்வேடுகளுக்கான ஆய்வுச் சுருக்கத்தையும், அவ்வாய்வில் இடம் பெற்றுள்ள கலைச்சொற்களின் பட்டியலை தமிழ் இணையக் கல்விக்கழகத்துக்கு அளித்து, அதற்காக தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அளிக்கப்படும் சான்றினை பெற்று இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை பல்கலைக்கழகங்களுக்கான முனைவர் பட்ட ஆய்வேடு அளிப்பதற்கான பொதுவான விதிமுறைகளுடன் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், உயர்கல்வித் துறையின் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் 22.06.2022 அன்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

  • ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக அங்கீகரித்து இவ்விணையதளத்தில் வழங்க வேண்டும்.
  • இதனை பல்கலைக்கழகங்களின் தேர்வு கட்டுப்பாட்டாளர் அல்லது இணையான அலுவலர் அளவில் உள்ளிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
  • பல்கலைக்கழகங்கள் மூலம் அனுப்பப்படும் ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியல்களில் கீழ்கண்ட விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வழங்க வேண்டும்.
வ. எண். பொருள் விவரம்
1. ஆய்வுத் தலைப்பு / Research Title:
2. பொருள் / Subject:
3. ஆய்வாளர் பெயர் / Name of the Researcher:
4. ஆய்வாளர் பதிவு எண் மற்றும் வருடம் / Researcher’s Register No & year:
5. ஆய்வாளர் அலைப்பேசி எண் / Researcher’s Mobile No:
6. ஆய்வாளர் மின்னஞ்சல் முகவரி / Researcher’s email ID:
7. நெறியாளர்(கள்) பெயர் / Name of the Guide(s):
8. குறிச்சொற்கள் / Keywords:
9. பல்கலைக்கழகம் / University:
10. கல்லூரி / College:
11. துறை / Department:
12. சமர்ப்பிக்கும் ஆண்டு / Submission Year
  • மேற்காணும் விவரங்களுடன் ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியல் (Thesis abstract, synopsis and glossaries) தனித்தனி கோப்புகளாக .docx மற்றும் .pdf வடிவில் அதற்குண்டான பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் ஒருங்குறி (Unicode font) எழுத்துரு TAU-Marutham வடிவில் அமைய வேண்டும். [எழுத்துரு தொடர்பாக கொடுக்கப்பட்ட https://www.tamilvu.org/ta/unicode இணைப்பைக் காண்க]
  • தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்பு மற்றும் கலைச்சொற்களின் பட்டியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பின்பு சான்று ஒப்புதல் பெற்றவுடன் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பப்படும்.